Wednesday, May 07, 2008

பேச்சின் ஒழுங்குகள்

ஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை,உடை,பாவனைகள் படம் பிடித்து காட்டுவது போல் பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்து காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும் மென்மையானவாகவும் கடுமை காட்டுபவனாகவும் பிரதிபலிக்கச் செய்யும சக்தி அவன் பேசும் பேச்சுக்கு உண்டு.

சில வேளைகளில் நாம் விளையாட்டாக சில வார்த்தைகளை கூறி விடுகிறோம். நாம கூறிய பொருளை உண்மையில் நம் உள்ளத்தில் மனபூர்வமாக ஒத்துக் கொள்ளாமல் கேலிக்காக கூறிய போதிலும் கேட்பவர் அதை விபரிதமாக விளங்கி கொள்கிறார்.

நாம் நல்லவராக இருந்தாலும் நம்முடைய பேச்சு நம்மைத் தீயவானாக சித்தரித்து விடுகிறது. வார்த்தையை விட்டவர் நான் ஒரு பேச்சிற்காகத் தான் சொன்னேன் என்று எவ்வளவு சமாளிப்புகளை கூறினாலும் மனதில் பதிந்த காயம் மறையாத வடுவாகப் பதிந்து விடுகிறது.

விளையாட்டு வார்த்தைகள் பல விபரிதங்களை விதைத்து விடுகின்றன. கடுமையான வார்த்தைகள் கலகத்தை உண்டு பண்ணுகின. கனிவான வார்த்தைகள் கல் நெஞ்சம் கொண்டோரையும் கனிய வைத்து விடுகிறது. இது போன்று ஏராளமான இன்பங்களும துன்பங்களும் நம் பேச்சின் பயனாக வந்தமைகின்றன.

மேற்கண்ட விசயங்கள் அனைத்தையும் அன்றாட வாழ்வில் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். அல்லாஹ்வை நம்பியவன், நம்பாதவன் ஆகிய இருவரும் முறையானபேச்சின் அவசியத்தை உணர்ந்து கொள்வதற்கு இந்நிகழ்வுகளே போதுமானானதாகும்.

ஆனால் மனிதன் தனக்கு வழங்கப்பட்ட அறிவை முறைகேடாகப் பயன்படுத்துவான் என்பதால், ஆன்மீக ரீதியில் இஸ்லாம் அவனுக்கு இதை உணர்த்துகின்றது. அழகியபேச்சுகளை மட்டுமே பேசும்படி இஸ்லாம் வலியுறுத்துகின்றது. பயனில்லாத பேச்சுக்களைபேச வேண்டாம் என்று தடை விதிக்கின்றது.

நன்றி: உணர்வு.