சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு டிஸ்கவரி விண்கலத்தை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது இந்த விண்கலத்தில் 7 பேர் பயணம் செய்தனர்.இவர்கள் அனைவரும் ஆராய்ச்சி மையத்தில் ஏற்ப்பட்டுள்ள மின்வசதி கோளாரை சரி செய்யும் பணிக்காக அனுப்பட்டுள்ளனர்.இவர்களில் ஒருவர் சுனிதா.இவரை இந்தியப் பெண் என்று இந்தியப் பத்திரிகைகள் அனைத்தும் வர்ணித்துள்ளன.
ஒருவர் இந்தியப் பெண்ணாக இருக்க வேண்டுமெனில் அவர் இந்தியாவில் பிறந்து இருக்க வேண்டும் அல்லது இந்திய குடியுரிமை பெற்றிருக்க வேண்டும். இதில் எதையும் செய்யாத சுனிதாவை இந்தியப் பெண் என்று எப்படித்தான் சொல்கிறார்களோ தெரியவில்லை.
சுனிதாவின் தந்தை இந்திய வம்சா வழியை சேர்ந்தவர்.தாயார் போலாந்து நாட்டுக்காரர்.இவர்கள்அமெரிக்காவில் குடியேறி பல தலைமுறைகள் ஆகி விட்டன.அதுவும் சுனிதா முழுக்க முழுக்க அமெரிக்கர்.அப்படி இருக்கையில் சுனிதாவை இந்தியப் பெண் என்று சொல்வது ஏனோ?
சுனிதாவின் தாய் போலந்து நாட்டுக்காரர்.இருப்பினும் போலந்த நாட்டுக்காரர்கள் போலந்து பெண்மணி என்று சொல்வது இல்லை.சுனிதாவை இந்தியப் பெண்மணி என்று சொல்வது தராள மனப்பான்மையின் வெளிப்பாடல்லவா? என்கின்றனர் சிலர்.நன்றாக இருக்கட்டும்.அப்படி
சொன்னவர்கள் இந்திய குடியுரிமை பெற்ற தன்னை முழுக்க முழுக்க இந்தியராகவே மாற்றிக் கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியாவை மட்டும் வெளிநாட்டுக்காரர் என்று விமர்சிப்பது ஏன்?சோனியாவுக்கு ஒரு நீதி,சுனிதாவுக்கு ஒரு நீதியா?
சுனிதா தன்னை எந்த ஒரு கட்டத்திலும் இந்திய பெண் என்று சொல்லி கொண்டதே இல்லை.ஆனால் சோனியா "இந்த இந்திய நாட்டுக்காக தன் இன்னுயிரையும் தர தயார்" என்று கூறியிருக்கிறார்.இவரைப் போய் வெளிநாட்டுக்காரர் என்று வசைபாடுவது நியாயமா? என்பதே நமது கேள்வி.
இந்திய மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களை அன்னியர்கள் என்று அடைமொழியிட்டு அவதூறு செய்யும் ஒரு கும்பல்தான் சுனிதாவை இந்தியப் பெண் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லி மனம் மகிழ்கிறது.அதுதான் நமக்கு நெருடலாக் இருக்கிறது இந்த ஆரியமாயை
மாய வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாகும்.
நன்றி -உணர்வு 22/12/06
Sunday, December 24, 2006
Subscribe to:
Posts (Atom)