Saturday, November 25, 2006

சார்ஜாவில் இருந்து துபையை அடைய படும் பாடு

சரியாக காலை 5.30 மணிக்கு அலாரத்தை அலற விட வேண்டுங்க வேண்டா வெறுப்பாக எவ்வளவு அசதியாக இருந்தாலும் விரைந்து குளித்து தயாராகி விட வேண்டும். அதாவது 30-35 நிமிடங்களில் மணி 6.05 அல்லது 6.10 எல்லாம் காருக்குள் இருந்தாக வேண்டும் . (5 நிமிடம் தாமதித்தால் 100-150 கார்கள் பின்னால் நமது கார்) இப்படி சூப்பர் மேன் வேகத்தில் புறப்பட்டால் தேரா துபையை அடைய 45 நிமிடங்கல் ஆகும். அதாவது காலை 8 மணிக்கு தொடங்கும் வேலைக்கு அலுவலகத்தில் 6.45 திற்கே இருக்கும் நிலைமை.அரை ம்ணி நேரம் தாமதமாக கிளம்பினால் என்ன ஆகும் என்கிறீர்களா 9 மணிக்கு மேல்தான் ஆபிஸ். இது மட்டும் போதாது என்றால்சாலையில் கரை பம்பர் டு பம்பரிலேயே ஓட்டியாக வேண்டும் இல்லையென்றால் இன்னும் பின் தங்கி விடுவோம்?!.சாலை விதிகளை மீறாமல் மீறுபவர்களை சகித்து கொண்டு இன்ன பலகஷ்ட்டங்களை தினமும் அனுபவிப்பவனில் அடியேனும் ஒருவன் தாங்களில் யாரேனும் இதையே அனுபவிப்பவராக இருந்தால் சுமையை பகிர்ந்து கொள்ளலாம்.சரி இவவளவு கஷ்டப்பட்டு ஏன் சார்ஜாவில் தங்க வேண்டும் என்று கேட்கிறீர்களா இங்குதான் பிளாட் வாடகை குறைவாகவும் மற்றும் வசதிகள் நிறைய இருந்தது.அதற்கும் வைத்து விட்டார்கள் ஆப்பு துபை ரியல் எஸ்டேட் காரர்கள் அங்கு வாடகையை ஏற்ற சார்ஜாவை நோக்கி எடுத்தது கூட்டம் இப்ப இங்கும் மோசமான நிலமை.இதை தொடர்ந்து வாகன நெரிசலால் திட்டமிட்டபடிஇலக்கைஅடையமுடிவதில்லை.அரசாங்கம் எதையிம் கண்டு கொண்ட மாதிரி தெரியல.இந்த வாகன நெரிசலால் குறிப்பாக காலை நேரங்களில் அவசரமாக விமான நிலையமோ அல்லது ஆஸ்பத்திரிக்கோ செல்ல நிர்பந்தம் ஏற்ப்பட்டால் தலை கிழ் நின்று மன்றாடினாலும் நடக்காது என்பதே என் கருத்து.எனது வழி தடம் அல் வஹ்தா சாலையில் இருந்து தேரா துபை வரை.

30 comments:

'))'))> said...

குறுக்கு வழி அல்லது புதிய யுக்திகள் வரவேற்க்கப்படுகிறது

said...

ஷார்ஜா - துபை ஏ(ஷே)ர் ஆட்டோ / no frills flight சேவை ஏதெனும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லையா

'))'))> said...

அனானி ஐயா,
தாங்கள் வருகைக்கு நன்றி
கொடுமை என்ன என்றால் 12-15 கி.மி தூரம்தான் துபை. 2 வீலரில் பயணத்தால் கூட 15 நிமிடங்களில் அடைய முடியும் ஆனால் கடுமையான வெயில் மேலும் 2 வீலர் பயணம் இங்கு பாதுக்கப்பானது இல்லை. தாங்கள் சொன்னது போல் no frills flight சேவை எதுவும் இல்லை.

said...

Try to have Share-heli (Helicopter Sharing) Services!

'))'))> said...

அனானி,

12 கி.மி க்கு ஹெலிக்காப்டரா ஹி ஹி

said...

//12 கி.மி க்கு ஹெலிக்காப்டரா ஹி ஹி //

Then Why ask // குறுக்கு வழி அல்லது புதிய யுக்திகள் வரவேற்க்கப்படுகிறna//??

'))'))> said...

அனானி,

விட மாட்டீர்கள் போல்,

நன்றி வாழ்க.

'))'))> said...

துபையிலிருந்து ஷார்ஜா சென்று திரும்பிம்போது இந்தப் போக்குவரத்தில் எங்கள் மகனும் மாட்டிக்கொள்வதைப் பார்த்து இருக்கிறேன்.
நீங்க சொல்வதுபோல் ஏர்ளிபேர்ட்
வின்ஸ் த ரேஸ்.
சீக்கிரம் தூங்கப் போகலாம்.:-)

'))'))> said...

ஷார்ஜாவில் வியாழன் இரவு பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த காரில், அலுவலகம் கிளம்ப இன்று காலை 25.11.06 வந்து பார்த்தால், எவரோ பம்பரில் முத்தமிட்டு போயிருக்கிறார்கள். காவலுக்கு தொலைபேசி 999 அடிக்கிறது எடுக்கவில்லை. 101ல் எண் விசாரித்து அப்புறம் 065634444 இட்டால் அடிக்கிறது எடுப்பாரில்லை. மீண்டும் 101, புதிய எண் 065381111 போட்டால் மீண்டும் அதே நிலை.

மண்டை காயந்து அறைக்குத் திரும்பினால் 'ஷார்ஜாவில் இப்போதான் முதல் அனுபவமா? மீண்டும் மீண்டும் மனம் தளராத விக்ரமாதித்தனாக முயற்சி செய்தால்தான் கிடைக்கும்' என்று அறை நண்பர் சொல்ல

'1.யாராவது உயிருக்கு ஊசலாடும் நிலையில் முயற்சி செய்தால் அவர் கதி அதோ கதிதான். என்றும்
2. துபை காவல் மாதிரி உலகத்திலேயே கிடையாது என்று துபை காவல் ஏற்பாடுகளை வாழ்த்தியும்'

மனதுக்குள் நினைத்தவாறே விக்ரமாதித்யனானேன். மூன்று மணி நேரத்தில் காவல் வந்து ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொண்டு மூன்று நாள் கழித்து அலுவலகத்தில் உரிமத்தையும் ரிப்போர்ட்டும் பெற்றுக் கொள்ளச் சொல்லி விட்டது. இன்னும் என்னென்ன நடக்குமோ?

வாடகை மட்டும் கூடுதல் இல்லையென்றால் துபையை விட்டு விட்டு ஒருவர் கூட வேறெங்கும் போக மாட்டார்கள்.

'))'))> said...

வல்லிசிம்ஹன்,
தாங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

தாங்கள் சொல்வது உண்மை early bird wins the race அதனால்தானே அலாரத்தை 5.30க்கே முடுக்கி வைக்கிறோம்.

'))'))> said...

பொடக்குடியான், (தமிழில் எழுதச் சந்தேகமாக உள்ளது உங்கள் பெயர்)

ஷார்ஜா - துபாய் தினப்படி பிரச்சினை முழுக்க முழுக்க இல்லாவிடினும் பாதியாவது அனுபவிப்பவன் (ஷார்ஜா எல்லையில் என் அலுவலகம்) என்ற முறையில்:

1. தப்பிக்க முடியாது முடியாது முடியவே முடியாது!

2. நீங்களே சொன்னதுபோல துபாய் நடுத்தர மக்கள் ஷார்ஜாவுக்கும், ஷார்ஜா நடுத்தரம் அஜ்மானுக்கும் இடப்பெயர்ச்சி செய்வது கார்களை தினந்தோறும் ஆயிரக்கணக்கில் ஏற்றிக்கொண்டிருக்கின்றன.

சுருக்கு வழி என்பது உங்கள் அதிர்ஷ்டத்தை மட்டுமே பொறுத்தது. ஸஹாரா மால் ஒரு நாள் காலியாய் இருக்கும் என சொன்னதை நம்பிப் போனால் புரட்டாசி மாத திருப்பதியாய் இருக்கும், அல் தாவுன் வழியும் காட்டெருமைதான், எப்ப பாயும் எப்ப மேயும்னு யாருக்கும் தெரியாது.

காலையில் கிளம்பும்போது கடவுளைத் தியானித்துவிட்டு செல்வது பயன் தரும்:-))

'))'))> said...

//காலையில் கிளம்பும்போது கடவுளைத் தியானித்துவிட்டு செல்வது பயன் தரும்:-))//

அவர் டிராபிக் ஜாமில் மாட்டாது இருந்தால்மட்டுமே உங்கள் தியானம் பலனளிக்க கூடும். :-)

'))'))> said...

நல்ல வேளை தங்கியிருப்பது நேஷனல் பெயிண்ட். உத்தியோகம் ஜபல் அலி தப்பிச்சேனா?

துவக்கத்தில்தான் பிரச்னையிருக்கும். அவீர் காய் கனி மார்க்கெட் கொஞ்சம் தயங்கும். அதற்கப்புறம் அதிகமான நாட்களில் கார் நிற்காது. ஏதாவது பெரிய ஆக்ஸிடென்ட் என்றாலொழிய.

said...

இந்தியாவில் பிழைக்க வழி தெரியாத இந்த நபர்கள் ஏதோ ஹை டக் கனவாக பீலா விடுறாங்க
ஏதோ த்பாய் வேலை பார்க்கிறங்கன்னு சொல்லிகிறது இவங்களுக்கு பெருமை போல். உல்கம் தெரியாதவங்க

'))'))> said...

சுல்தான்,
வருகைக்கு நன்றி.தாங்களின் கூற்று சரியானது.எனக்கும் சில அனுபவம் சார்ஜா போலிசிடம் உண்டு.மேலும் சேமிப்பை மனதில் கொண்டு நாம் சார்ஜாவில் பாடாய் படுகிறோம்.என்றாவது ஒரு நாள் யுனைடட் அரப் எமிரேட் "யுனைடட்"ஆகாதா என்ன?

said...

//சுல்தான்,
வருகைக்கு நன்றி.தாங்களின் கூற்று சரியானது.எனக்கும் சில அனுபவம் சார்ஜா போலிசிடம் உண்டு.மேலும் சேமிப்பை மனதில் கொண்டு நாம் சார்ஜாவில் பாடாய் படுகிறோம்.என்றாவது ஒரு நாள் யுனைடட் அரப் எமிரேட் "யுனைடட்"ஆகாதா என்ன?

என்னைகாவது இந்தியா வல்லராசாகுமா நம் உழைப்பை இந்தியவுக்கு கொடுப்போமாம் என்று நினைதது உண்டா??

'))'))> said...

வாங்க சுரேஷ்,
எனது ஊர் பொதக்குடி (திருவாருர் மாவட்டம்)
//1. தப்பிக்க முடியாது முடியாது முடியவே முடியாது!//

என்ன இப்படி சொல்லி புட்டிக.

//2. நீங்களே சொன்னதுபோல துபாய் நடுத்தர மக்கள் ஷார்ஜாவுக்கும், ஷார்ஜா நடுத்தரம் அஜ்மானுக்கும் இடப்பெயர்ச்சி செய்வது கார்களை தினந்தோறும் ஆயிரக்கணக்கில் ஏற்றிக்கொண்டிருக்கின்றன//

ரொம்ப நிதர்சனமான உண்மை

//சுருக்கு வழி என்பது உங்கள் அதிர்ஷ்டத்தை மட்டுமே பொறுத்தது. ஸஹாரா மால் ஒரு நாள் காலியாய் இருக்கும் என சொன்னதை நம்பிப் போனால் புரட்டாசி மாத திருப்பதியாய் இருக்கும், அல் தாவுன் வழியும் காட்டெருமைதான், எப்ப பாயும் எப்ப மேயும்னு யாருக்கும் தெரியாது.//

அந்த பக்கமே தலை வைத்து படுக்க மாட்டேனுங்க

//காலையில் கிளம்பும்போது கடவுளைத் தியானித்துவிட்டு செல்வது பயன் தரும்//

இன்று வரை அதைதான் செய்கிறேன்

நன்றி

said...

கொஞ்சம் பொறுமையா இருங்க.
2015 வரைக்கும் தான் இந்த பிரச்னையெல்லாம். அதுக்குள்ள் நிறைய சாலைகள், பாலங்கள் எல்லாம் போடப் போறாங்களாம். - நான் சொல்லலை.சார்ஜா அதிகாரிகள் சொல்றாங்க.

அதுக்கப்புறமும் இந்த பிரச்னை தீரலைன்னா.... ஹி.ஹி. அதுக்குள்ள் உங்களுக்கு இது பழகிப் போயிடாதா?

சாத்தான்குளத்தான்

'))'))> said...

பொதக்குடியான்,
இப்போதான் நான் இன்னிக்கு அலுவலகம் வந்த விதத்தை மறந்து தமிழ்மணம் வந்தேன். நீங்க விடமாட்டீங்க போல இருக்கே. நாம் நேஷனல் பெயிண்ட்ஸ் ஏரியால தங்கி இருக்கேன். அலுவலம் தேரா துபை. 6.30 வண்டில ஏறியாச்சு. நேஷனல் பெயிண்ட்ஸ் ரவுண்டபௌட் வர 7.45 ஆச்சு (வீட்டிலிருந்து ரவுண்டபௌட் 1 KM தூரம் தான்). அப்புறம் அலுவலம் வந்து சேர 8.35 ஆச்சு. எப்படியிருந்திருக்கும் என் நிலமை. இளையராஜாவும் (80-களின்), என்னோட எம்.பி.3 யும் இல்லன்னா அவ்ளோதான்.

குறுக்கு வழியா?? இனிமேல் பாதாள சுரங்கம் தான் தோண்டனும்.

'))'))> said...

முத்து குமரன்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

'))'))> said...

//இந்தியாவில் பிழைக்க வழி தெரியாத இந்த நபர்கள் ஏதோ ஹை டக் கனவாக பீலா விடுறாங்க
ஏதோ த்பாய் வேலை பார்க்கிறங்கன்னு சொல்லிகிறது இவங்களுக்கு பெருமை போல். உல்கம் தெரியாதவங்க//

//என்னைகாவது இந்தியா வல்லராசாகுமா நம் உழைப்பை இந்தியவுக்கு கொடுப்போமாம் என்று நினைதது உண்டா??//

ஒய் அனானி,

அங்கு வேலை இல்லாமல் தானே இங்கு பாடய் படுகிறோம் இதுல நீரும் வேறா.அப்புறம் இந்தியா வல்லரசு ஆக எங்களின் அண்ணிய செலவாணியிம் தேவைதானே?

'))'))> said...

சடையப்பா வாங்க,

//பர்துபாய் பார்க்கிலோ அல்லது சத்வா பார்க்கிலோ உறங்கலாம், அலுவலக கழிப்பறையை பயன்படுத்தி குளிக்கலாம். இது ஒரு சிலர் இங்கு செய்யும் யுக்திகள். நீங்க ரெடியா?.//

இது சாத்தியமா?

நன்றி வாழ்த்துக்கள்

'))'))> said...

ஆசிப்ஜி வாங்க,

2015 க்கு எல்லாம் பிளானிங் தருகிறிங்க! இதில் இருந்து தெரிவது என்ன என்றால் நீங்க சார்ஜா வாசி அல்ல

நன்றி

'))'))> said...

லொடுக்கு சார் வாங்க,

தினமும் 45 நிமிடங்களில் ஆபிஸில் சேரும் நான் இன்று 90 நிமிடம் ஆகி விட்டது.பிசாசு வாகன நெரிசல்.

2015 வரை பொருமையாக இருக்க வேண்டியதுதான்-உபயம் ஆசிப்ஜி

'))'))> said...

அஜ்மானிலிருந்து கராமா வர இரண்டு மணி நேரம் ஆனது.யாராவது
ஒரு நல்ல வழி சொல்லுங்கய்யா புண்யமா போகும்

லியோ சுரேஷ்
துபாய்

'))'))> said...

லியோ சுரேஷ் வாங்க,

//அஜ்மானிலிருந்து கராமா வர இரண்டு மணி நேரம் ஆனது.யாராவது
ஒரு நல்ல வழி சொல்லுங்கய்யா புண்யமா போகும்//

2017 ல் வழி பிறக்கும் ஹி ஹி

'))'))> said...

இன்றுதான் உங்கள் பதிவு பார்த்தேன். உங்கள் அலுவலகத்தில் சொல்லி அலுவலக நேரத்தை காலை 7.00 மனிக்கு ஆரம்பிக்கச் சொல்லுங்கள் அல்லது 7 - 8 ஒரு மணி நேரத்திற்கு ஓவர்டைம் கேளுங்கள்.

'))'))> said...

கபீர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

'))'))> said...

போக்குவரத்தைச் சாமாளிப்பதற்க்காக தற்பொழுது துபாய்வாசிகள் உம் அல் குவைனையும், ராஸ் அல் கைமாவையும் நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். நீங்களும் ட்ரை செய்து பார்க்காலாமே?.

'))'))> said...

இந்த பிரச்சினைக்கு நம்மிடம் வழி இல்லை. ஆனால் சார்ஜாவின் ரோலா ஏரியா மற்றும் அதைத் தொட்ட ஏரியாவில் இருப்பவர்களுக்கு ஹீரா ஏரியாவில் படகுத்துறை உருவாக்கி கடலில் படகுப் போக்குவரத்து ஏற்படுத்தலாம். பர்துபாய், தேரா படகுத்துறை மற்றும் புதிதாக ஜீமைராக்கும் இடையிடேயே ஏற்படுத்தலாம். அங்கிருந்து துபாயின் மற்ற இடங்களுக்கு பஸ் வசதி செய்தால் கொஞ்சம் டிராபிக் குறையலாம்.... :)