Sunday, December 24, 2006

சுனிதாவுக்கு ஒரு நீதி சோனியாவுக்கு இன்னொரு நீதியா?

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு டிஸ்கவரி விண்கலத்தை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது இந்த விண்கலத்தில் 7 பேர் பயணம் செய்தனர்.இவர்கள் அனைவரும் ஆராய்ச்சி மையத்தில் ஏற்ப்பட்டுள்ள மின்வசதி கோளாரை சரி செய்யும் பணிக்காக அனுப்பட்டுள்ளனர்.இவர்களில் ஒருவர் சுனிதா.இவரை இந்தியப் பெண் என்று இந்தியப் பத்திரிகைகள் அனைத்தும் வர்ணித்துள்ளன.

ஒருவர் இந்தியப் பெண்ணாக இருக்க வேண்டுமெனில் அவர் இந்தியாவில் பிறந்து இருக்க வேண்டும் அல்லது இந்திய குடியுரிமை பெற்றிருக்க வேண்டும். இதில் எதையும் செய்யாத சுனிதாவை இந்தியப் பெண் என்று எப்படித்தான் சொல்கிறார்களோ தெரியவில்லை.

சுனிதாவின் தந்தை இந்திய வம்சா வழியை சேர்ந்தவர்.தாயார் போலாந்து நாட்டுக்காரர்.இவர்கள்அமெரிக்காவில் குடியேறி பல தலைமுறைகள் ஆகி விட்டன.அதுவும் சுனிதா முழுக்க முழுக்க அமெரிக்கர்.அப்படி இருக்கையில் சுனிதாவை இந்தியப் பெண் என்று சொல்வது ஏனோ?

சுனிதாவின் தாய் போலந்து நாட்டுக்காரர்.இருப்பினும் போலந்த நாட்டுக்காரர்கள் போலந்து பெண்மணி என்று சொல்வது இல்லை.சுனிதாவை இந்தியப் பெண்மணி என்று சொல்வது தராள மனப்பான்மையின் வெளிப்பாடல்லவா? என்கின்றனர் சிலர்.நன்றாக இருக்கட்டும்.அப்படி
சொன்னவர்கள் இந்திய குடியுரிமை பெற்ற தன்னை முழுக்க முழுக்க இந்தியராகவே மாற்றிக் கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியாவை மட்டும் வெளிநாட்டுக்காரர் என்று விமர்சிப்பது ஏன்?சோனியாவுக்கு ஒரு நீதி,சுனிதாவுக்கு ஒரு நீதியா?

சுனிதா தன்னை எந்த ஒரு கட்டத்திலும் இந்திய பெண் என்று சொல்லி கொண்டதே இல்லை.ஆனால் சோனியா "இந்த இந்திய நாட்டுக்காக தன் இன்னுயிரையும் தர தயார்" என்று கூறியிருக்கிறார்.இவரைப் போய் வெளிநாட்டுக்காரர் என்று வசைபாடுவது நியாயமா? என்பதே நமது கேள்வி.

இந்திய மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களை அன்னியர்கள் என்று அடைமொழியிட்டு அவதூறு செய்யும் ஒரு கும்பல்தான் சுனிதாவை இந்தியப் பெண் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லி மனம் மகிழ்கிறது.அதுதான் நமக்கு நெருடலாக் இருக்கிறது இந்த ஆரியமாயை
மாய வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி -உணர்வு 22/12/06

Saturday, November 25, 2006

சார்ஜாவில் இருந்து துபையை அடைய படும் பாடு

சரியாக காலை 5.30 மணிக்கு அலாரத்தை அலற விட வேண்டுங்க வேண்டா வெறுப்பாக எவ்வளவு அசதியாக இருந்தாலும் விரைந்து குளித்து தயாராகி விட வேண்டும். அதாவது 30-35 நிமிடங்களில் மணி 6.05 அல்லது 6.10 எல்லாம் காருக்குள் இருந்தாக வேண்டும் . (5 நிமிடம் தாமதித்தால் 100-150 கார்கள் பின்னால் நமது கார்) இப்படி சூப்பர் மேன் வேகத்தில் புறப்பட்டால் தேரா துபையை அடைய 45 நிமிடங்கல் ஆகும். அதாவது காலை 8 மணிக்கு தொடங்கும் வேலைக்கு அலுவலகத்தில் 6.45 திற்கே இருக்கும் நிலைமை.அரை ம்ணி நேரம் தாமதமாக கிளம்பினால் என்ன ஆகும் என்கிறீர்களா 9 மணிக்கு மேல்தான் ஆபிஸ். இது மட்டும் போதாது என்றால்சாலையில் கரை பம்பர் டு பம்பரிலேயே ஓட்டியாக வேண்டும் இல்லையென்றால் இன்னும் பின் தங்கி விடுவோம்?!.சாலை விதிகளை மீறாமல் மீறுபவர்களை சகித்து கொண்டு இன்ன பலகஷ்ட்டங்களை தினமும் அனுபவிப்பவனில் அடியேனும் ஒருவன் தாங்களில் யாரேனும் இதையே அனுபவிப்பவராக இருந்தால் சுமையை பகிர்ந்து கொள்ளலாம்.சரி இவவளவு கஷ்டப்பட்டு ஏன் சார்ஜாவில் தங்க வேண்டும் என்று கேட்கிறீர்களா இங்குதான் பிளாட் வாடகை குறைவாகவும் மற்றும் வசதிகள் நிறைய இருந்தது.அதற்கும் வைத்து விட்டார்கள் ஆப்பு துபை ரியல் எஸ்டேட் காரர்கள் அங்கு வாடகையை ஏற்ற சார்ஜாவை நோக்கி எடுத்தது கூட்டம் இப்ப இங்கும் மோசமான நிலமை.இதை தொடர்ந்து வாகன நெரிசலால் திட்டமிட்டபடிஇலக்கைஅடையமுடிவதில்லை.அரசாங்கம் எதையிம் கண்டு கொண்ட மாதிரி தெரியல.இந்த வாகன நெரிசலால் குறிப்பாக காலை நேரங்களில் அவசரமாக விமான நிலையமோ அல்லது ஆஸ்பத்திரிக்கோ செல்ல நிர்பந்தம் ஏற்ப்பட்டால் தலை கிழ் நின்று மன்றாடினாலும் நடக்காது என்பதே என் கருத்து.எனது வழி தடம் அல் வஹ்தா சாலையில் இருந்து தேரா துபை வரை.

Sunday, October 29, 2006

அரையிறுதிக்கான போட்டியில் இந்தியா ஆஸி இன்று மோதல்

அரையிறுதிக்கான போட்டியில் இந்தியா ஆஸி இன்று மோதல்
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் பங்கு பெறும் அணியை முடிவு செய்யும் முக்கிய போட்டியில் இன்று ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதுகின்றன.காயம் காரணமாக இன்று ஆடும் இந்திய போட்டியில் யுவராஜ் சிங் விளையாடவில்லை.வேகப்பந்துவீச்சாளர் அகார்கரும் காயமுற்றுள்ளதால், அவருக்கு பதிலாக ஸ்ரீசாந்த் இடம்பெறுகிறார்.
இன்றைய ஆட்டக்களம் ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பான்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தாங்கள் கடைசியாக ஆடிய பல ஆட்டங்களை விடவும் இந்த ஆட்டத்திற்கு அதிகமான தயாரிப்பு தேவைப்பட்டுள்ளதாக தெரிவித்த
பான்டிங், எந்த விதமான சாக்குபோக்குகளையும் தனது வீரர்களிடம் இருந்து தான் அனுமதிக்கவில்லை என்று கூறினார்.முதலில் தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் ஆட்டத்தின் போது உபயோகிக்கப்பட்ட ஆடுகளத்தில்
தான் ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. இப்போது நியூசிலாந்து பாகிஸ்தான் ஆடிய களம் உபயோகிக்கப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து ஆரம்பத்தில் விரைவில் விக்கெட்டுகளை இழந்தது என்றாலும் இரண்டு அரைசதங்களால் தொடரின்
அதிக பட்ச ரன்களான 284 ரன்களை குவித்து பாகிஸ்தானை அபாரமாக வெற்றி கொண்டது நினைவிருக்கலாம்.அந்த ஆடுகளத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் கூட, ஆடுகளத்தின் இயல்பான பண்பு
அதிகம் மாறியிருக்காது என்று இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். தனக்கு மொகாலி ஆடுகளத்தில் நல்ல பரிச்சயம் உள்ளது என்று கூறிய டிராவிட் அங்கு எப்போதுமே கொஞ்சம் பவுன்ஸ் ஆகும் தன்மை இருக்கும் என்று கூறினார். இது போன்ற ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமன்றி, ஹர்பஜன் சிங் போன்ற சுழல் பந்து வீச்சாளர்களுக்கும் மிகுந்த உதவியளிக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 'பி' பிரிவில் இருந்து நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன. 'ஏ' பிரிவில் இருந்து மேற்கு இந்திய தீவுகள் அணி ஏற்கனவே அரையிறுதியில் இடம் பிடித்து விட்டது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் 4வது அணியாக இருக்கும்.
அணிகள் :
இந்தியா: டென்டுல்கர், சேவாக், பதான், டிராவிட், முகமது கைபு, தினேஷ் மோங்கியா, தோனி,ஹர்பஜன் சிங், முனாப் படேல், ஆர் பி சிங், ஸ்ரீசாந்த்.
ஆஸ்திரேலியா: ஷேன் வாட்ஸன், ஆதம் கில்கிறிஸ்ட், ரிக்கி பான்டிங், டேமியன் மார்டின், ஆன்ட்ரூ சைமன்ட்ஸ், மைகேல் கிளார்க், மைகேல் ஹஸ்ஸி, பிரெட் லீ, நாதன் பிராக்கன், க்ளென் மெக்ராத்,
மிட்செல் ஜான்சன்.
நன்றி msn தமிழ்

Sunday, September 24, 2006

நியுயார்க் நகரம் உறங்காத நேரம்......

பிரமாதமான புகைப்படங்கள் நியுயார்க் நகரமும் லிபர்டி சிலையும் இது ஜோனஸ் பீச் நினைவு நாள் ஏர் ஷோவில் எடுக்கப்பட்டது.

These are some of the best shots of NYC and the Statue of Liberty you'll ever see.
Memorial Day Air Show from Jones Beach , NY













Saturday, September 23, 2006

முதல்வரின் பாரட்டு விழாவில் லத்தி சார்ஜ்


நன்றி: தினமலர்

விலங்குகள் நம்மை போல் சிந்தித்தால்!?

விலங்குகள் நம்மை போல் சிந்தித்தால் என்னவாகும்!?










Thursday, September 21, 2006

லுப்தான்ஸா ஏர்பஸ் விஐபி சலூன்

லுப்தான்ஸா (Lufthansa Airlines VIP Saloon) ஏர்பஸ் என்னமா இருக்கிறது பாருங்கள். திருச்சிக்கு சர்விஸ் தொடங்கினால் இதில் வரலாம் என்று இருக்கிறேன். நம்ம ஊர் பக்கமில்லையா அதனால்தான் ஹி ..ஹி.








Wednesday, September 20, 2006

பேப்பர் கட்டிங் ஆர்ட்

பேப்பர் கட்டிங் ஆர்ட் மிகவும் நன்றாக உள்ளது. பள்ளி பருவங்களில் நாம் செய்த ஒன்றுதான் என்றாலும் சற்று வித்தியாசமானது.










Wednesday, September 13, 2006

அனகோண்டாவை பிடிப்பது எப்படி?

அனகோண்டாவை பிடிப்பது போல் வந்துள்ள ஈ மெயில் அனைவரின் பார்வைக்கும் வைக்கிறேன் இது எந்த அளவுக்கு உண்மை என்பதை தெரிந்தவர்கள்தான் சொல்ல வேண்டும்.










Tuesday, September 12, 2006

இதைதான் கைவண்ணம் என்பார்களோ?