Sunday, August 13, 2006

ஒட்டகத்தின் கதை

ஒட்டகத்தின் கதை


குட்டி ஒட்டகம் : அம்மா நான் ஒரு கேள்வி கேட்கலாமா?

தாய் ஒட்டகம் : ஒ தாளாரமாக என் மகனே அதில் என்ன பிரச்சனை?

குட்டி ஒட்டகம் : நமக்கு முதுகில் ஏன் திமில் இருக்கிறது?

தாய் ஒட்டகம் : நல்லது மகனே நாம் எல்லாம் பாலைவன மிருகங்கள் அல்லவா தண்ணீர் சேமித்து வைத்து கொள்ளமகனே.

குட்டி ஒட்டகம் : நல்லது அப்புறம் ஏன் உயர்ந்த கால்கலும் பட்டையான மிதில்கலும்

தாய் ஒட்டகம் : மகனே அதனால்தான் இந்த பாலைவனத்தில் இலகுவாக பயணிக்கிறோம்! மற்ற யரையிம் விட.

குட்டி ஒட்டகம் : நல்லது அப்புறம் எதற்க்காக கண் இமைகள் பெரியதாக உள்ளது சில சமயம் அது பார்கவே கடினமாகஉள்ளதே

தாய் ஒட்டகம் : செல்லமே அந்த பெரிய கண் இமைகள்தான் இந்த பாலைவன காற்று மண்ணுக்கு பாதுக்காப்பு வலையமாக உள்ளது

குட்டி ஒட்டகம் : அப்படி என்றால் திமில் தண்ணிர் சேமிக்க, நீண்ட கால்கள் இலகுவாக பாலையில் பயணிக்க, பெரியஇமைகள் பாலைவன காற்று மண்ணிற்கு கவசம்.

குட்டி ஒட்டகம் : இன்னும் ஒரு கேள்வி மம்மி

தாய் ஒட்டகம் : எஸ் டியர்

குட்டி ஒட்டகம் : பின்னே எதற்க்காக இந்த மிருக காட்சி சாலையில் அடைபட்டு உள்ளோம்

தாய் ஒட்டகம் : ?????


கதை சொல்லும் படிப்பினை


ஆற்றல், அறிஉ, திறமை மற்றும் அனுபவம் யாவையும் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும்.


நீங்கள் எங்கு இருக்கிறிர்கள்?